ஷாருக்கான் படத்திலிருந்து விலகிய அனிருத்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கிங்’. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், தற்போது இசையமைப்பாளர் அனிருத் தொடர்பான புதிய தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கிங்’ படத்திலிருந்து விலகிய அனிருத்!

முதலில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், விரைவில் தனது திருமணம் நடைபெறவுள்ளதால் இப்படத்திலிருந்து அவர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஷாருக்கான் – அனிருத் கூட்டணியில் உருவாகவிருந்த இசையை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Anirudh walks out of Shah Rukh Khan's film
Anirudh walks out of Shah Rukh Khan’s film

அனிருத்துக்கு பதிலாக யார் தெரியுமா?

அனிருத் விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக பிரபல இசையமைப்பாளர் இரட்டையர்களான Sachin–Jigar இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘கிங்’ படத்தின் இசை குறித்த எதிர்பார்ப்பும் புதிய திசையில் திரும்பியுள்ளது.

நவம்பர் 11-ல் அனிருத் – காவ்யா மாறன் திருமணம்:

இதற்கிடையே, சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் அனிருத்தும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதாகவும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி, வரும் நவம்பர் 11, 2026 அன்று கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், திருமணம் மற்றும் ‘கிங்’ படத்திலிருந்து அனிருத் விலகியதற்கான காரணம் குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளதா என்பதைப் பொறுத்தே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Leave a Comment