பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்க தயாராகும் ‘ராமாயணம்’!

Ramayana is set to rock the box office

இந்திய சினிமாவில் இதுவரை உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘ராமாயணம்’. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். மேலும், சன்னி தியோல், ரவி துபே உள்ளிட்ட பல முன்னணி … Read more

உலகளவில் புதிய சாதனை படைத்த ரஜினியின் ‘ஜெயிலர் 2’!

Rajinikanth's Jailer 2 sets a new record worldwide

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர் 2’. கடந்த அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகி … Read more

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘மகாசக்தி டிரான்ஸ்’ வீடியோ வெளியானது!

Mahasakthi Trance Video From Mookuthi Amman 2

நடிகை நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள இப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய … Read more

மோகன்லால் – அனூப் சத்யன் இணையும் புதிய படம்! L368

Mohanlal and Anoop Sathyan to team up in new film

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குநர் சத்யன் அந்திக்காட்டின் மகனும், ‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தின் இயக்குநருமான அனூப் சத்யன் இப்படத்தை இயக்குகிறார். கடந்த 2020-ம் ஆண்டு துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா நடிப்பில் வெளியான ‘வரனே அவஷ்யமுண்டு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அனூப் சத்யன், தற்போது தனது இரண்டாவது படத்திற்காக மோகன்லாலுடன் இணைந்துள்ளார். தற்காலிகமாக ‘எல் … Read more

அருள்நிதியின் ‘வேட்ட சாமி’ படத்தின் முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ வெளியானது!

Vetta Saami Movie First Single

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. ‘பம்பர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எம். செல்வகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேரடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஜிப்ரான் … Read more

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்தின் முதல் பாடல் ‘தங்கப்புள்ள’ வெளியானது!

Thagappan Movie First Single

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. ‘கிடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரா. வெங்கட் இப்படத்தை இயக்கி வருகிறார். ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் ஜீவாவுடன் நடிகை ரஜிஷா விஜயன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் குழந்தை நட்சத்திரம் கேசவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பா – மகன் … Read more

100-வது நாள் கொண்டாட்டத்தில் ‘ஜனநாயகன்’!

Jana Nayagan celebrates 100th day

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகி 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற சிறப்புக் காட்சியில் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். குறிப்பாக, படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் விஜய்யின் முதலமைச்சர் டைட்டில் கார்டு காட்சியை 8 முறை மீண்டும் ஒளிபரப்பக் கோரிய சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படம் கடந்த ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் … Read more

நிஜ வாழ்க்கையில் ‘சைபர் செக்யூரிட்டி கேப்டன்’ ஆன மம்மூட்டி!

Mammootty becomes a Cyber ​​Security Captain in real life

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார். கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் அவர் முக்கியப் பங்காற்ற உள்ளார்.  கேரளாவில் இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பங்களிப்புடன் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘கிளிக் … Read more

தனுஷிற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த சூர்யா!

Suriya expressed his heartfelt gratitude to Dhanush

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’. மலையாளத்தில் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். மேலும், நஸ்லென் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுசின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் … Read more

வெளிநாட்டில் சூர்யாவின் ‘சீன்’ படத்திற்கு அமோக வரவேற்பு!

Suriya's Scene receives a great reception abroad

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’. மலையாளத்தில் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜீத்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நஸ்லென் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், ‘சீன்’ திரைப்படத்தின் வெளிநாட்டு முன்பதிவு தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே தொடங்கியுள்ளது. இருப்பினும், … Read more