பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கிங்’. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது படத்தின் வெளியீட்டிற்கு முன்பே ப்ரீ-பிசினஸில் மிகப்பெரிய தொகையை ஈட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ‘கிங்’!
இப்படத்தில் ஷாருக்கானுடன் அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அனில் கபூர் மற்றும் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

ரூ.175 கோடிக்கு விற்பனையான வெளிநாட்டு உரிமை!
இந்நிலையில், ‘கிங்’ திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை Phars Film நிறுவனம் சுமார் ரூ.175 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியத் திரைப்படங்களின் வெளிநாட்டு உரிமை விற்பனையில் இவ்வளவு பெரிய தொகை பேசப்படுவது வர்த்தக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாகும் முன்பே இத்தகைய பிரம்மாண்ட வியாபாரம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஷாருக்கானே தயாரிப்பாளர்!
மேலும், இப்படத்தை ஷாருக்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Red Chillies Entertainment மூலம் தயாரித்துள்ளார். இதனால் படத்தின் வியாபாரம் மற்றும் வெளியீடு தொடர்பான ஒவ்வொரு தகவலும் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் வெளியீட்டை முன்னிட்டு தயாராகி வரும் ‘கிங்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும்போது வசூலில் எந்த அளவுக்கு சாதனை படைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!