நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சீன்’ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள மூன்றாவது படமாக ‘சீன்’ வெளியாகவுள்ளது. வரும் தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள இயக்குநருடன் இணைந்த சூர்யா!
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘ஆவேசம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியாவும், முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நஸ்லெனும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தை நடிகர் சூர்யாவே தயாரித்துள்ள நிலையில், மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
வெளியானது சீன் படத்தின் டிரைலர்!
ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன. இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், தற்போது ‘சீன்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடல்களுக்கு கிடைத்த கலவையான வரவேற்பைத் தொடர்ந்து, டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. டிரைலரைப் பார்க்கும்போது சூர்யாவின் நடிப்பு மற்றும் ஜித்து மாதவனின் இயக்கம் படத்திற்கு எந்த அளவுக்கு பலம் சேர்க்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் ‘சீன்’ திரைப்படம் சூர்யாவுக்கு மற்றொரு வெற்றிப் படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
Scene Trailer: