‘ராமாயணா’ படத்திற்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான புதிய தகவல்!

இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

Sai Pallavi salary for the film Ramayana
Sai Pallavi salary for the film Ramayana

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ராமாயணா!

இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும், ராவணன் கதாபாத்திரத்தில் யஷ்ஷும் நடித்துள்ளனர். மேலும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகமான ‘ராமாயணா பார்ட் 1’ வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய் பல்லவியின் சம்பளம் ரூ.12 கோடியா?

இந்நிலையில், இப்படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. அதன்படி, ‘ராமாயணா’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிப்பதற்காக அவர் மொத்தம் ரூ.12 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து தனது நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் சாய் பல்லவி, இந்த பிரம்மாண்ட படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படியை எட்டியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்படம் தொடர்பான முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தற்போது சாய் பல்லவியின் சம்பளம் குறித்த தகவலும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Comment