பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் வெங்கடேஷின் ‘ஆதர்ஷ குடும்பம்’!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர்: 47 – AK 47’. பிரபல இயக்குநர் திரிவிக்ரம் இயக்கியுள்ள இப்படம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வெங்கடேஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, யுவினா பார்த்தவி, நிவேதா பெத்துராஜ், சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Aadarsha Kutumbam Movie Box Office Collection
Aadarsha Kutumbam Movie Box Office Collection

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் முதல் இரண்டு நாட்களுக்கான உலகளாவிய வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ‘ஆதர்ஷ குடும்பம்’ திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வார இறுதி நாட்களிலும் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment