பொங்கல் ரேஸில் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’? வெளியானது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களின் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் பா. ரஞ்சித், தற்போது Sci-Fi ஆக்ஷன் கதைக்களத்தில் ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் குறித்த புதிய அப்டேட் தற்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஆர்யா – அட்டகத்தி தினேஷ் கூட்டணி!

இப்படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், சோபிதா துளிபாளா, கலையரசன், ஷபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Vettuvam Movie Release Date Locked
Vettuvam Movie Release Date Locked

2027 பொங்கலுக்கு வெளியாகும் வேட்டுவம்!

சமீபத்தில் இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘வேட்டுவம்’ திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.75 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட உருவாக்கம்!

சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்டண்ட் இயக்குநராக திலீப் சுப்பராயனும், கலை இயக்குநராக எஸ்.எஸ். மூர்த்தியும், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே-வும் பணியாற்றியுள்ளனர். Sci-Fi மற்றும் ஆக்ஷன் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான திரையரங்கு அனுபவத்தை வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Leave a Comment