418 – திரைப்பட விமர்சனம் | சைத்ரா ஆர்ச்சர், சூரியராஜ் வீரபதினி, பிரீத்தி பகடலா

418 – திரைப்பட விமர்சனம் (418 Movie Tamil Review)

படக்குழு:

நடிகர்கள்: சைத்ரா ஆர்ச்சர், சூரியராஜ் வீரபதினி, பிரீத்தி பகடலா

இசை: வெங்கி CG

ஒளிப்பதிவு: தினேஷ் திவாகரன்

எடிட்டிங்: அகுல் அவினாஷ்

தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

இயக்கம்: கீர்த்தன் நடகௌடா.

கதைச் சுருக்கம்:

வேதகிரி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் சுமார் 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுக் கிடக்கும் ஆண்கள் விடுதி பிளாக் ஒன்று இருக்கிறது. அந்தக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால், நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டிருக்கும் விடுதியை மீண்டும் திறக்க நிர்வாகம் முடிவு செய்கிறது. ஆனால் அந்த விடுதியில் இருக்கும் 418 என்ற குறிப்பிட்ட அறையை மட்டும் திறக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த அறையில் காஞ்சனாவின் அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், அதைத் திறந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் அந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்குகிறார். அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து பல அமானுஷ்ய சம்பவங்கள் நிகழத் தொடங்குகின்றன. அந்த 418 அறைக்குள் உண்மையில் என்ன இருக்கிறது? இத்தனை ஆண்டுகளாக அந்த அறை ஏன் பூட்டப்பட்டிருந்தது? காஞ்சனாவுக்கும் அந்த அறைக்கும் என்ன தொடர்பு? இறுதியில் அந்த மாணவருக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை.

FC விமர்சனம்:

நடிகர்களை பொறுத்தவரை முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சைத்ரா ஆர்ச்சர் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆனால் அவரது கதாபாத்திரம் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்கலாம். சூரியராஜ் வீரபதினி, பிரீத்தி பகடலா ஆகியோர் முக்கியமான பகுதிகளில் தனது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளார். மேலும் துணை நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

இசையமைப்பாளர் வெங்கி ஜிஜியின் பின்னணி இசை சில இடங்களில் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாகப் படத்தில் இடம்பெறும் தாலாட்டு பாடல் ஒரு விதமான மர்மமான மற்றும் திகிலூட்டும் உணர்வை ஏற்படுத்துகிறது. அந்தப் பாடல் படத்தின் சூழலுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.  இருப்பினும், ஒட்டுமொத்த பின்னணி இசையும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஒளிப்பதிவு, புரொடக்ஷன் டிசைன், சவுண்ட் டிசைன் என படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பயங்கரமான சம்பவத்துடன் கதையைத் தொடங்கி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்குகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு கல்லூரி மற்றும் விடுதிக் காட்சிகள் நீண்ட நேரம் நகர்கின்றன. பல இடங்களில் கதை மெதுவாகச் செல்வதால் சலிப்பு ஏற்படுகிறது. சில ஜம்ப் ஸ்கேர்ஸ் காட்சிகள் மட்டுமே ஓரளவுக்கு ரசிக்க வைக்கின்றன. இன்டர்வெல் பிளாக்கில் முக்கியமான விஷயம் ஒன்று வெளிப்படுத்தப்படும்போது, அடுத்த பாதியில் பெரிய சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.

முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி ஓரளவுக்குப் பரவாயில்லை. குறிப்பாக, எளிதில் கணிக்க முடியாத ஒன்று அல்லது இரண்டு திருப்பங்கள் படத்திற்கு சுவாரஸ்யத்தைச் சேர்க்கின்றன. ஆனால் அதைத்தாண்டி பெரிய அளவில் சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெறவில்லை.  பிளாஷ்பேக் காட்சிகள் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேபோல், கிளைமாக்ஸில் பல விஷயங்களை விளக்க முயற்சித்த விதமும் இன்னும் தெளிவாக அமைந்திருக்கலாம். முக்கியமாக சைத்ரா ஆச்சர்வின் கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்குப் பரிதாபம் ஏற்பட வேண்டிய இடங்களில் அது சரியாக வேலை செய்யவில்லை.

பலம்:

  • வித்தியாசமான சைக்காலஜிக்கல் ஹாரர் கதைக்களம்.
  • 418 என்ற மர்மமான அறையை மையமாகக் கொண்ட பின்னணி.
  • நடிகர்களின் தேவையான நடிப்பு.
  • தாலாட்டுப் பாடல்.
  • ஒளிப்பதிவு மற்றும் புரொடக்ஷன் டிசைன்.
  • ஒன்றிண்டு எதிர்பாராத திருப்பங்கள்.

பலவீனம்:

  • முதல் பாதியில் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்கிறது.
  • எதிர்பார்த்த அளவுக்கு திகில் காட்சிகள் இல்லை.
  • பல ஜம்ப் ஸ்கேர்ஸ் காட்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
  • சைத்ரா ஆச்சர் கதாபாத்திரம் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்கலாம்.
  • பிளாஷ்பேக் காட்சிகள் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
  • கிளைமாக்ஸ் இன்னும் தெளிவாக அமைந்திருக்கலாம்.
  • படம் முடிந்த பிறகும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் இருக்கிறது.

குடும்பத்துடன் பார்க்கலாமா? – இந்தப் படத்தில் பாலியல் காட்சிகள் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால் ரத்தம் தெறிக்கும் காட்சிகள், கொடூரமான காட்சியமைப்புகள் மற்றும் தற்கொலை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்தப் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே வயது வந்தவர்கள் மட்டுமே பார்ப்பதற்கு ஏற்ற திரைப்படம்.

இறுதியாக, ‘418′ மாரான சைக்காலஜிக்கல் ஹாரர் மிஸ்டரி

Film Crazy Rating – 2.5 /5

Leave a Comment