சீன் – திரைப்பட விமர்சனம் | சூர்யா, நஸ்ரியா, நஸ்லென்

சீன் – திரைப்பட விமர்சனம் (Scene Tamil Movie Review)

படக்குழு:

நடிகர்கள்: சூர்யா, நஸ்ரியா, நஸ்லென், ஆனந்த் ராஜ், லால்

இசை: சுஷின் ஷ்யாம்

ஒளிப்பதிவு: வினீத் அகஸ்டின்

எடிட்டிங்: அஜ்மல் சாபு

தயாரிப்பு: ழகரம் ஸ்டுடியோஸ், 2D என்டர்டெயின்மென்ட்

இயக்கம்: ஜித்து மாதவன்.

Scene Movie Review & Rating
Scene Movie Review & Rating

கதைச் சுருக்கம்:

‘இன்பராஜ்’ என்கிற காவல்துறை அதிகாரியாக வரும் சூர்யா, திடீரென தனது பணியை ராஜினாமா செய்கிறார். அதேநேரம், ஊரில் அடுத்தடுத்து தொடர்கொலைகள் நடக்க, இந்த வழக்கு சூர்யாவின் பார்வையில் வருகிறது. எதனால் சூர்யா தனது பணியை ராஜினாமா செய்கிறார்? இந்த வழக்கிற்கும், சூர்யாவிற்கும் என்ன சம்மந்தம்? இறுதியாக இந்த வழக்கை வெற்றிகரமாக முடித்து வைத்தாரா? என்பதே முழுக்கதை.

Scene Movie Review & Rating
Scene Movie Review & Rating

FC விமர்சனம்:

ரோமாஞ்சம், ஆவேஷம் எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜித்து மாதவன் இப்படத்தில் வெற்றிப் பெற்றுள்ளாரா? என்பதை பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நாயகன் சூர்யா, இதுவரை அவர் ஏற்றிடாத ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் (அந்த கதாப்பாத்திரத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது),  காமெடி, தோற்றம், நடை, உடல்மொழி, நடிப்பு எனப் பல விஷயங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். நஸ்ரியா, அவருக்குக் கொடுக்கப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். குறிப்பாக, நஸ்ரியா அறிமுகமான பிறகு கதை இன்னும் சுவாரஸ்யமாகிறது. முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நஸ்லென் தனது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளார். தமிழில் ஒரு அழுத்தமான அறிமுகம் என்று சொல்லலாம். லால், ஆனந்தராஜ், கஜராஜ் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். மேலும், படத்தில் இரண்டு முக்கியமான கேமியோ கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். பாடல்கள் சுமாராக இருந்தாலும், சில முக்கியமான காட்சிகளில் இவருடைய பின்னணி இசை அந்தச் சம்பவங்களின் தாக்கத்தை அதிகரிக்கிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கூடுதல் பலம். இயக்குனர் ஜித்து மாதவன், தனது முந்தைய படங்கள் போலவே இந்தப் படத்திலும் தனது வழக்கமான பாணியில் பிளாக் காமெடி கலந்த கிரைம் டிராமாவை உருவாக்கியுள்ளார். காமெடி சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறது, பல இடங்களில் சோதிக்கவும் செய்கிறது.

Scene Movie Review & Rating
Scene Movie Review & Rating

இப்படத்தின் முதல் பாதியில் வரும் ஒரு முக்கியமான சர்ப்ரைஸ் எலிமென்ட் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. கதாபாத்திரங்களையும் கதையின் பின்னணியையும் அறிமுகப்படுத்துவதற்கே முதல் பாதியில் அதிக நேரம் செலவிடப்பட்டுள்ளது. சில நகைச்சுவைக் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். ஆனால், இரண்டாம் பாதி கூடுதல் சுவாரஸ்யமாக இருந்தது, குறிப்பாக கடைசி 30 நிமிடம் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது. மேலும், கிரைம் த்ரில்லர் கதை என்பதால் வில்லன் கதாப்பாத்திரம் இன்னுமே அழுத்தமாக இருந்திருக்கலாம்.

பலம்:

  • சூர்யாவின் வித்தியாசமான கதாபாத்திரமும் சிறப்பான நடிப்பும்.
  • நஸ்ரியா மற்றும் நஸ்லெனின் நடிப்பு.
  • சில இடங்களில் சிறப்பாக வேலை செய்யும் காமெடி.
  • முதல் பாதியில் இடம்பெறும் சர்ப்ரைஸ் எலிமென்ட்.
  • கடைசி 20–25 நிமிடங்களின் விறுவிறுப்பான திரைக்கதை.

பலவீனம்:

  • முதல் பாதியில் திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கலாம்.
  • கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக நேரம் எடுத்துக்கொள்வது.
  • வில்லன் கதாபாத்திரம் போதுமான மிரட்டலுடன் சித்தரிக்கப்படவில்லை.
  • பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

குடும்பத்துடன் பார்க்கலாமா? – படத்தில் பாலியல் காட்சிகள் இல்லை. இருப்பினும், சில இடங்களில் சடலங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான காட்சிகள் இடம்பெறுவதால் UA 16+ சான்றிதழ் கிடைத்துள்ளது, எனவே வயது வரம்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, ‘சீன்’ டைம் பாஸ் என்டர்டெயினர்

Leave a Comment