‘தி டார்க் ஹெவன்’ கூட்டணியின் அடுத்த படம் ‘தி லாஸ்ட் கேஸ்’… மீண்டும் இணையும் சித்து – பாலாஜி!

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கத்தில் சித்து, தர்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘தி லாஸ்ட் கேஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஒவ்வொரு குற்றமும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்லும் என்ற சுவாரஸ்யமான கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அந்தத் தடயங்கள் குற்றவியல் சார்ந்த கோட்பாடுகளையே மாற்றியமைக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Sidhu's New Film Tittled The Last Case
Sidhu’s New Film Tittled The Last Case

இதுகுறித்து இயக்குநர் பாலாஜி கூறுகையில், “இந்தப் படமும் மலைப்பகுதியில் நடைபெறும் குற்றப் புலனாய்வு சார்ந்த கதையாக இருந்தாலும், முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். படத்தின் பின்னணியில் இடம்பெறும் நிலப்பரப்பு மற்றும் இயற்கைக் காட்சிகள் இப்படத்திற்கு தனித்துவமான அனுபவத்தைத் தரும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சித்து பேசுகையில், ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் இதற்கு முன்பு தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எனக்கு ஒரு முக்கியமான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்தான். அந்தப் படத்தில் நான் நடித்த பாரி கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு ரசிகர்கள் என்னை அடையாளப்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பாலாஜி மீண்டும் இந்தப் படத்திலும் நடிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். முதல் படம் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் படத்திற்காக எனது சம்பளத்தை உயர்த்தவில்லை. குறைவான சம்பளத்திலேயே நடித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சித்து – பாலாஜி கூட்டணி இணைந்திருப்பதால், ‘தி லாஸ்ட் கேஸ்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sidhu's New Film Tittled The Last Case
Sidhu’s New Film Tittled The Last Case
Sidhu's New Film Tittled The Last Case
Sidhu’s New Film Tittled The Last Case
Sidhu's New Film Tittled The Last Case
Sidhu’s New Film Tittled The Last Case

Leave a Comment