சந்தானம் நடிப்பில் ‘Devil’s Double Next Level’ திரைப்பட டிரைலர் இதோ

Devil's Double Next Level Movie Trailer
Devil's Double Next Level Movie Trailer

சந்தானம் நடிப்பில் ‘Devil’s Double Next Level’ திரைப்பட ட்ரைலர்:

சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமாக ‘Devil’s Double Next Level’ திரைப்படம் உருவாகியுள்ளது.

முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கீத்திகா திவாரி, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘தி பீபுல் ஷோ’ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் மே மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Devil’s Double Next Level Movie Trailer:

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…