“நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும், எனக்கு திருப்திதான்” நடிகை ராஷ்மிகா உருக்கம்:
தெலுங்கு, தமிழ் & இந்தி என சென்சேஷன் நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் ‘ஜாவா’ என்கிற படத்தில் நடித்துள்ளார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவாகியுள்ள இப்படத்தில் சத்ரபதி சிவாஜியாக விக்கி கவுசல் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியது, இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா மந்தனா, ‘தென்னிந்திய நடிகையான நான் மராட்டிய மகாராணியாக நடித்தது, வாழ்நாளில் கிடைத்த பெரும் வாய்ப்பு. இதை பெருமையாகப் பார்க்கிறேன். இந்தப் படத்துக்குப் பிறகு, நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும், எனக்கு திருப்திதான் என்று இயக்குநர் லக்ஷ்மனிடம் சொன்னேன். நான் அடிக்கடி அழுகிற நடிகையில்லை, ஆனால் இதன் டிரெய்லரை பார்க்கும்போது இயல்பாகவே எமோஷனலாகி விடுகிறேன்’ என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…