ஜீவாவின் ‘தகப்பன்’ படத்தின் முதல் பாடல் ‘தங்கப்புள்ள’ வெளியானது!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. ‘கிடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரா. வெங்கட் இப்படத்தை இயக்கி வருகிறார். ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் ஜீவாவுடன் நடிகை ரஜிஷா விஜயன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் குழந்தை நட்சத்திரம் கேசவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Thagappan Movie First Single
Thagappan Movie First Single

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பா – மகன் இடையேயான ஆழமான பாசம், அன்பு மற்றும் உறவை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் வெறும் 40 நாட்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ பாடலைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து ஜீவா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வரும் 2026 டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட இப்படம் குடும்ப ரசிகர்களைக் கவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment