சிவகார்த்திகேயன் & ஜெயம் ரவி படத்தின் தலைப்பு இதுவா?

11
Sivakarthikeyan - Sudha Kongara Movie Title Revealed
Sivakarthikeyan - Sudha Kongara Movie Title Revealed

சிவகார்த்திகேயன் & ஜெயம் ரவி படத்தின் தலைப்பு இதுவா?:

‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. என்ன காரணத்தினாலோ சூர்யா அப்படத்திலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அந்த கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க, பவர்ஃபுல் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இவர்களுடன்  அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ‘பராசக்தி’ எனத் தலைப்பிட்டுள்ளது, இதன் அறிமுக டீசரை படக்குழு தணிக்கை செய்திருக்கிறது. அதில் ‘பராசக்தி’ என்ற பெயருடன் செய்திருக்கிறார்கள். மேலும், சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியது. ஆனால், படத்தின் தலைப்பு வெளியாகிவிட்டதால் தற்போது அடுத்த வாரமே டீசரை வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan - Sudha Kongara Movie Title Revealed
Sivakarthikeyan – Sudha Kongara Movie Title Revealed

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…