பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் நடிகை சம்யுக்தா? எந்த படத்தில் தெரியுமா?:
தெலுங்கில் போயபதி சீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘அகண்டா 2’. 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கும்பமேளாவில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆந்திராவில் கிராமம் ஒன்றில் சண்டைக் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக நடிகை சம்யுக்தா ஒப்பந்தமாகியுள்ளார். முதல் பாகத்தில் பிரக்யா நடித்திருந்தார். அவருக்கு பதிலாக சம்யுக்தா ஒப்பந்தமாகி இருக்கிறாரா அல்லது இவர் வேறொரு கதாபாத்திரமா என்பது விரைவில் தெரியவரும். தமன் இசையமைக்கும் இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…