தள்ளிபோகிறதா அஜித்தின் ‘குட் பேட் அக்லி’? விவரம் இதோ:
அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் முதலில் இசையமைக்க இருந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போதுக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிப் போகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…