‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘மகாசக்தி டிரான்ஸ்’ வீடியோ வெளியானது!

நடிகை நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள இப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Mahasakthi Trance Video From Mookuthi Amman 2
Mahasakthi Trance Video From Mookuthi Amman 2

இதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன் ஊர்வசி, ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திலிருந்து ‘Mahasakthi Trance’ என்ற புதிய வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆன்மிகம் மற்றும் பக்தி உணர்வை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் மற்றும் விளம்பரப் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘மகாசக்தி டிரான்ஸ்’ வீடியோ படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து உருவாகியுள்ள இப்படம் இந்த முறை ரசிகர்களை எந்த அளவிற்கு கவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

‘மகாசக்தி டிரான்ஸ்’ வீடியோ:

Leave a Comment