மாஸ் காட்டும் ‘ஜன நாயகன்’ படத்தின் பிசினஸ்! லேட்டஸ்ட் அப்டேட் இதோ:
நடிகர் விஜய் – H.வினோத் கூட்டணியில் உருவாக்கி வரும் ‘ஜன நாயகன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பிசினஸ் இப்போதே சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதன்படி, ஜன நாயகன் படத்தின் ஓவர்சீஸ் உரிமம் ரூ.75 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆனதில்லை என ட்ரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஐந்தாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். KVN ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…