‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!

0
Yezhu Kadal Yezhu Malai Movie Second Single Update
Yezhu Kadal Yezhu Malai Movie Second Single Update

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ:

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ‘V House Productions’ நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசிற்கு தயாராகவுள்ளது.

இதற்கிடையில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விருது விழாக்களிலும் கலந்து கொண்டு விருதுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் ஜூலை 5ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ‘ஏழேழு மலை’ என துவங்கும் இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Yezhu Kadal Yezhu Malai Movie Second Single Update
Yezhu Kadal Yezhu Malai Movie Second Single Update

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0