‘எண்ணித்துணிக’ திரைப்பட விமர்சனம் | Yenni Thuniga Movie Review and Rating

0
Yenni Thuniga Movie Review and Rating
Yenni Thuniga Movie Review and Rating

‘எண்ணித்துணிக’ திரைப்பட விமர்சனம் | Yenni Thuniga Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப் மற்றும் பலர்.

இசை: சாம் CS

ஒளிப்பதிவு: J.B. தினேஷ் குமார்

எடிட்டிங்: V.J.சாபு ஜோசப்

தயாரிப்பு: சுரேஷ் சுப்ரமணியன்

இயக்கம்: S.K.வெற்றி செல்வன்.

Yenni Thuniga Movie Review and Rating
Yenni Thuniga Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வைரங்கள் ஒரு நகைக் கடையில் இருக்க, அதை எப்படியாவது தட்டி தூக்கவேண்டும் என நினைத்து களத்தில் இறங்கும் ஒரு கொள்ளை கும்பல், அதை வெற்றிகரமாக திருடியும் செல்கின்றனர். இப்படி திருடிவிட்டு தப்பிசெல்லும் இந்த கும்பலினால் ஏற்கனவே தனது வாழ்கையில் இழப்பை சந்தித்த கதாநாயகன் ஜெய் எப்படியாவது இவர்களை பழிவாங்க வேண்டுமென்கிற முனைப்பில் அவர் மறுபுறம் களமிறங்குகிறார். இறுதியாக அந்த கும்பலை பிடித்து கொடுத்தாரா? இல்லை பழிதீர்த்தரா? எப்படி செய்தார்? என்பதே கதைச்சுருக்கம்.

Yenni Thuniga Movie Review and Rating
Yenni Thuniga Movie Review and Rating

FC விமர்சனம்:

ஜெய் நடிப்பில் அறிமுக இயக்குனர் வெற்றி செல்வன் இயக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 4) தியேட்டர்களில் வெளியாகியுள்ள ‘எண்ணித்துணிக’ படம் எப்படி இருக்கு என்பதை விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். முதலில் நடிகர்களை பொறுத்தவரை ஹீரோ ஜெய் ஆக்ஷன் ஹீரோவிற்கான அனைத்தையும் செய்துள்ளார், நேர்த்தியாகவே செய்துள்ளார். ஹீரோயின் அதுல்யா ரவி, பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தை அழகாக செய்து கொடுத்துள்ளார். இவர்களை தவிர வரும் முக்கிய பாத்திரங்கள் அனைவருமே எடுத்துக் கொண்ட பாத்திரங்களை குறையில்லாமல் செய்துள்ளனர்.

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை, தினேஷின் ஒளிப்பதிவு ஒரு காமர்ஷியல் படத்திற்கு என்னென்ன, எப்படி  வேண்டுமோ அதை நன்றாகவே செய்துள்ளார். அதேபோல் சாம் CS-ன் இசை ஓகே ரகம்தான் என்றாலும் ஓரளவு கைக் கொடுத்திருக்கிறது. இப்படத்தை பொறுத்தவரை ஓரளவு ரசிக்கக்கூடிய கதைக்களமாக இருந்தாலும், திரைக்கதையில் ஒரு சில காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படியாக இருக்கிறது. இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். உதாரணமாக படத்தின் வில்லனை ஹீரோ ஜெய் கடைசியாக தான் கண்டுப்பிடிக்கிறார், ஆனால் ஆடியன்ஸ் நமக்கு படத்தின் பாதியிலேயே காட்டி விடுவதால் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது.

Yenni Thuniga Movie Review and Rating

இதெல்லாம் விட ஹீரோ ஜெய் – ஹீரோயின் அதுல்யா இருவருக்கும் சுத்தமாக கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகவில்லை, அது ஏன்? என்றும் தெரியவில்லை… இதனாலேயே காதல் காட்சிகள் வந்தாலே நமக்கு தூக்கம் வந்து விடுகிறது. கூடுதலாக படத்தில் வரும் பெரும்பாலான கதாப்பாத்திரங்களுக்கு டப்பிங்கில் லிப்சிங் சரியாக உட்காரவேயில்லை. லாஜிக் மீறல்கள் சொல்லவே வேண்டும் நிறையவே இருக்கிறது! இறுதியாக படம் எப்படி என்றால்? நல்ல கதைக்களம் தான், திரைக்கதையில் கோட்டை விட்டதால் ரொம்பவே ஆவ்ரேஜ் படமாக வந்துள்ளது இந்த ‘எண்ணித்துணிக’. சுமார் ரகம்தான்…

Yenni Thuniga Movie Film Crazy Media Rating: 2.5 /5

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்