யசோதா திரைப்பட விமர்சனம் | Yashoda Movie Review and Rating
படக்குழு:
நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன்,
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: M.சுகுமார்
எடிட்டிங்: மார்தான்ட் K வெங்கடேஷ்
தயாரிப்பு: ஸ்ரீதேவி மூவிஸ்
இயக்கம்: ஹரி – ஹரிஷ்.

கதைக்களம்:
தன்னுடைய தங்கையின் ஆபரேஷனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் தவிக்க, இதனால் வாடகை தாயாக கூட வருகிறேன், ஆனால் எனக்கு தேவையான பணம் வேண்டுமென முடிவெடுக்கிறார் படத்தின் நாயகி. இதனால் இவர் செல்லும் இடம் என்ன, அங்கு என்னென்ன கொடுமைகள் நடந்தது, இறுதியாக நாயகிக்கு என்ன நடந்தது? என்கிற சுவாரஸ்யமே இப்படத்தின் முழுக்கதை.
FC விமர்சனம்:
தமிழில் ‘அம்புலி’ என்கிற படத்தை இயக்கிய ஹரி – ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நாயகி சமந்தா, ஆக்ஷன் காட்சிகளும், எமோஷனல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பியுள்ளார். அதிலும் சண்டைக் காட்சிகள் ஒருபடி மேல் தான் என சொல்ல வேண்டும். நல்ல கதை தேர்வு மற்றும் அதற்கேற்ற முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். இவரைத் தவிர முக்கிய பாத்திரங்களில் வரும் வரலக்ஷ்மி சரத்குமார் & உன்னி முகுந்தன் ஆகிய இருவருமே எடுத்துக்கொண்ட பாத்திரங்களை நீட்டாக செய்து முடித்துள்ளனர்.
டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை, சுகுமார் ஒளிப்பதிவில் காட்சிகள் உயர்தரம், மணி ஷர்மா இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம்தான். மார்தான்ட் K வெங்கடேஷ் எடிட்டிங்கில் இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பு முதல்பாதியில் இல்லை. இன்னும் செதுக்கியிருக்கலாம். இப்படத்தில் வரும் செட் வேலைகள் பெரும்பாலும் தத்ரூபமாக, பிரம்மாண்டமாகவே தான் காணப்பட்டது. அந்த குழுவுக்கும் வாழ்த்துக்கள். VFX கிராபிக்ஸ் பொறுத்தவரை ஒருசில இடங்கள் நன்றாக இருந்தாலும், கிளைமாக்ஸ் சமயத்தில் வரும் கிராபிக்ஸ் ரொம்ப மோசமாகவே தான் தெரிகிறது, சொதப்பல் தான்!

இப்படத்தின் பெரிய பலம் என்ன வென்றால் கதைக்களத்தை தான் சொல்ல வேண்டும். வித்தியாசமான அதேநேரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயத்தை கையில் எடுத்து படமாக்கியதற்கே இயக்குனர்கள் ஹரி – ஹரிஷை பாராட்ட வேண்டும். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கலாம், படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முதல் பாதியில் இல்லை, மெதுவாகவே நகர்கிறது. இடைவேளைக்கு பிறகுதான் கதை சூடுப்பிடிக்கிறது. அதேபோல், டுவிஸ்ட் கலந்த விறுவிறுப்புடன் செல்லும் இரண்டாம் பாதியும் கூட கிளைமாக்ஸ் திருப்தியாக இல்லாததால் முழுமையில்லாமல் உட்கார்ந்து விடுகிறது. இதைவிட நம்ப முடியாத, லாஜிக்கே இல்லாத பல காட்சிகள் படமுழுக்க வந்து செல்கிறது. முடியல… இறுதியாக படம் எப்படி என்றால்? வெறும் பொழுதுபோக்கு என்று பார்த்தால் கண்டிப்பாக கதைக்காகவே ஒருமுறை பார்க்கலாம். மற்றபடி ஓகே ரகம்தான்…
Yashoda Movie Film Crazy Rating: 3 /5
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE