‘கவலை வேண்டாம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்து துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.


ஆனால் இந்த படங்களை ஓரங்கட்டி யாஷிகாவிற்கு மிகப்பெரிய பிரபலமாக்கிய திரைப்படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இப்படத்திற்கு பிறகு யாஷிகாவின் சினிமா வாய்ப்புகள் குவிய துவங்கும் என நினைத்தால் பெரிதாக ஒன்றும் அமையவில்லை. இதற்கு பின் சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியும் இவருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. ஒருபாடல், ஒரு காட்சி என போய் கொண்டிருந்த யாஷிகாவின் சினிமா பயணம் தற்போது சின்னத்திரையை நோக்கி திரும்பியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த், `ஹீரோவுக்கு கேர்ள் ஃப்ரெண்டா வர்றாங்களா அல்லது வில்லியாங்கிறதெல்லாம் லாக்டௌன் முடிஞ்சு ஷூட்டிங் தொடங்கின பிறகுதான் தெரியவரும்’ என கூறப்படுகிறது.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...