‘ரைட்டர்’ திரைப்பட விமர்சனம் | Writer Movie Review

0
Writer Movie Review and Rating
Writer Movie Review and Rating

‘ரைட்டர்’ திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: சமுத்திரக்கனி, இனியா, திலீபன், ஹரி கிருஷ்ணா மற்றும் பலர்.

இசை:கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: பிரதீப் கலிராஜா

எடிட்டிங்: மணிகண்டன் சிவகுமார்

தயாரிப்பு: நீலம் ப்ரொடக்ஷன்ஸ், கோல்டன்ரேஷியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் & ஜெட்டி ப்ரொடக்ஷன்ஸ்.

இயக்கம்: பிராங்க்ளின் ஜேக்கப்.

Writer Movie Review and Rating
Writer Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

கதையின் நாயகன் சமுத்திரக்கனி ஒரு நேர்மையான காவலர்(ரைட்டர்). இரண்டு மனைவிகள் வேறு சொல்லவா வேண்டும், இப்படிப்பட்ட ஒருவருக்கு என்னவெல்லாம் நடக்கும்? அதேதான், இப்படிப்பட்ட நிலையில் பொய் வழக்கு ஒன்றில் காவல்துறையிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞர்! யார் சிக்க வைத்தது? அந்த வழக்கிலிருந்து மீண்டாரா? சமுத்திரக்கனி என்ன செய்தார்? என்பதே கதைச்சுருக்கம்.

Writer Movie Review and Rating
Writer Movie Review and Rating

FC விமர்சனம்:

சமூகம், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக படங்களை கொடுத்துவரும் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ரைட்டர். இப்படத்தின் திரைவிமர்சனத்தை பார்ப்போம். சமுத்திரக்கனி என்றாலே நேர்மைதான் என்று நமக்கு தெரியும், அதேநேரம் நியாயம், கோபம், அவமானம், எமோஷன் என அனைத்தையும் முகபாவனைகளில் இப்படத்தில் கொட்டித் தீர்த்துள்ளார். அருமையான நடிப்பு. ரொம்ப குறைவான நேரமே வரும் இனியா கூட ஒருக் காட்சியில் கைத்தட்டல் பெறுகிறார். இவர்களை தவிர சுப்பிரமணிய சிவா, கவிபாரதி, ஜி.எம்.சுந்தர், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நல்ல ஸ்கோர் செய்துள்ளனர்.

Writer Movie Review and Rating
Writer Movie Review and Rating

பிரதீப்பின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் கூடுதல் பலம். காவல்துறையில் நடக்கும் பிரச்சனைகளையும், அநீதிகளையும் சமீப கால படங்கள் தோலுரித்து வருகின்றன. அந்த லிஸ்டில் இப்படமும் இணைந்துள்ளது. நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் கதையில் சமுத்திரக்கனியின் குடும்பப் பிரச்சனை, இடையே வரும் ஒரு பாடல் இவையெல்லாம் முதல் பாதியை சற்று தொய்வடைய செய்கிறது. கிட்டத்தட்ட  இடைவேளை வரை இதுபோன்ற தேவையில்லாதது போல் தெரியும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் படத்தின் இரண்டாம் பாதி எடுத்துக்கொண்ட களத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர், அதிலும் கிளைமாக்ஸ் அல்டிமேட். இரண்டாம் பாதி போல் முதல் பாதியும் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருந்தால் படத்தின் லெவல் வேறு, ஆனால் அது மிஸ்ஸிங். இறுதியாக படம் எப்படி என்றால், இன்றைய சமுதாயம் கண்டிப்பாக பார்க்கக்கூடிய ஒரு நல்ல படமாகவே வந்துள்ளது இந்த ரைட்டர்…

(பாராட்டுகள்: சமுத்திரக்கனி, இனியா, இயக்கம், ஒளிப்பதிவு, இசை)

  Writer Movie FC Rating: 3.5 /5  

மேலும் உங்களுக்காக: 

‘ராக்கி’ திரைப்பட விமர்சனம்

’83’ திரைப்பட விமர்சனம்

கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம்

‘பிளட் மணி’ திரைப்பட விமர்சனம்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here