‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளமா? உண்மை நிலவரம்: லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


AGS தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக நேற்று முதல் சமூக வலைத்தள பக்கங்களில் செய்திகள் பரவ துவங்கியது.
இந்நிலையில், இதுக்குறித்து விசாரிக்கையில் அது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.125 கோடி சம்பளம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…