‘அயலான்’ படம் தீபாவளிக்கு வெளியாகுமா? வெளியான தகவல் இதோ

0
Will 'Ayalan' release on Diwali Here is the update
Will 'Ayalan' release on Diwali Here is the update

 

‘அயலான்’ படம் தீபாவளிக்கு வெளியாகுமா? வெளியான தகவல் இதோ:

மாவீரன் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இப்படத்தை ‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் & KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Will 'Ayalan' release on Diwali Here is the update
Will ‘Ayalan’ release on Diwali Here is the update

நீண்ட வருடங்களாக கிடப்பில் இருக்கும் இப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தீபாவளிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்ட இப்படத்தின் பணிகள் நிறைவுபெறாததால் படம் தீபாவளிக்கு வெளியாகாது என்ற தகவல் பரவ துவங்கியது. இந்நிலையில் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள படக்குழுவினர், பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு இப்படம் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண