அகிலேஷ் யாதவை ஏன் சந்தித்தேன்? ரஜினி பேட்டி:
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுள்ளவிற்கு சென்றுள்ள நிலையில், தற்போது உத்தரப் பிரதேசத்தில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். நேற்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் இன்று மாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார்.


சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் அடிக்கடி பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை. அதனால் இப்போது அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்” என கூறியுள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண