‘கங்குவா’ படத்தில் சூர்யாவிற்கு வில்லன் இவரா? லேட்டஸ்ட் அப்டேட்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


கொடைக்கானலில் இப்படத்தின் ப்ரீயட் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வில்லன் யார்? என்கிற லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் நட்டி(நட்ராஜ்) இப்படத்தின் வில்லனாக நடித்து வருகிறார். மேலும், இவர் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் தான் கொடைக்கானலில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. PAN INDIA படமாக உருவாகிவரும் இப்படம் 3D தொழில்நுட்பத்தில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண