மக்களே உஷார்! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு

0
Water outlet from Chembarambakkam lake
Water outlet from Chembarambakkam lake

மக்களே உஷார்! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு:

சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(அக்.8) காலை 10 மணியளவில், விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர், வெள்ள நீர் போக்கி வழியாக திறக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். மில்லியன் கன அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 இன்று (07.10.2023) நீர் இருப்பு 21.96 அடியாகவும் கொள்ளளவு 3110 மில்லியன் கன அடியாகவுமுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நடவடிக்கையாக, இதனால் முன்னெச்சரிக்கை நாளை காலை (08.10.2023) 10.00 மணி அளவில் விநாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 100 கனஅடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

‘தி ரோட்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘இறுகப்பற்று’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘ரத்தம்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0