‘விசித்திரன்’ திரைப்பட விமர்சனம் | Visithiran Movie Review & Rating

0
Visithiran Movie Review & Rating
Visithiran Movie Review & Rating

‘விசித்திரன்’ திரைப்பட விமர்சனம் | Visithiran Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: RK சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, பகவதி பெருமாள் மற்றும் பலர்.

இசை: ஜிவி பிரகாஷ் 

ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்

எடிட்டிங்: சதீஷ் சூர்யா 

தயாரிப்பு: B ஸ்டுடியோஸ்

இயக்கம்: பத்மகுமார்.

Visithiran Movie Review & Rating
Visithiran Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

துப்பறிந்து குற்றவாளியை பிடிக்கும் திறமை சற்றும் குறையாத ஓய்வு பெற்ற போலீஸாக வரும் நாயகன், எந்நேரமும் குடியே கதியென்று இருக்கிறார். மறுபுறம் அவரது மகளும், மனைவியும் ஒரேமாதிரி விபத்தில் இறக்க, தனது ஓய்வு பெற்ற நண்பர்களுடன் சேர்ந்து மறைமுக விசாரணையை துவங்குகிறார் நாயகன், இறுதியாக உண்மைலேயே விபத்தில் தான் இறந்தார்களா? இல்லை இதற்குப்பின் ஏதேனும் சதி உள்ளதா? என்பதை கிளைமாக்ஸில் பெரிய டுவிஸ்ட்டுடன் முடிவதே இப்படத்தின் கதைச்சுருக்கம். 

Visithiran Movie Review & Rating
Visithiran Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜோசப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் இந்த விசித்திரன். கூடுதலாக ஜோசப் படத்தை இயக்கிய பத்மநாபனே இப்படத்தையும் இயக்கியுள்ளார். சரி, ரீமேக் சரியாக இருந்ததா? என்பதை விமர்சனத்தில் பார்ப்போம். நடிகர்களை பொருத்தவரை RK சுரேஷ், ஜோஜு ஜார்ஜ் கெட்டப்பிலேயே எடை கூடி மெனக்கட்டு நடித்துள்ளார். சொல்லப்போனால் RK சுரேஷ் சினிமா வாழ்கையில் நல்ல பெயரை வாங்கி தரலாம். மற்ற நடிகர்களும் கொடுத்த பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.

Visithiran Movie Review & Rating
Visithiran Movie Review & Rating

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் அவர்களது வேலையை நிறைவாக செய்துள்ளனர். ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே ரகம்தான். மலையாளத்தில் இயக்கிய அதே பத்மகுமார் இப்படத்தையும் இயக்கியுள்ளதால் ஒவ்வொரு அசைவையுமே அப்படியே ரீமேக் செய்துள்ளார். இதனால் மலையாள படங்களில் இருக்கும் அந்த மெதுவான காட்சி நகர்வு சற்று சோர்வை தருகிறது. இறுதியாக படம் எப்படி? என்றால் மலையாள ஜோசப் படத்தை பார்க்காதவர்களுக்கு ஒரு நல்ல கிரைம் திரில்லர் படமாக இந்த விசித்திரன் இருக்கும்…

Visithiran Movie FC Rating: 3.5 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்