ஆக்ஷன் படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் சக்ரா, அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.


‘சக்ரா’ திரைப்பட முன்னோட்ட வீடியோ
விஷால் ஃபிலிம் பாக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ ஷங்கர், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாகவும், ஹாக்கராகவும் இரு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் சிறிய முன்னோட்டம் இரும்புத்திரை போன்ற கதையம்சம் கொண்ட படமாக இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை விஷால் அறிவித்துள்ளார். விஷாலின் சக்ரா படத்தின் டிரைலர் வரும் ஜூன் 27 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 கருப்பு புடவையில் ரசிகர்களை கவர்ந்த அனசுயா பரத்வாஜ்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...