விருமன் திரைப்பட விமர்சனம் | Viruman Movie Review and Rating

0
Viruman Movie Review and Rating
Viruman Movie Review and Rating

விருமன் திரைப்பட விமர்சனம் | Viruman Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரன், பிரகாஷ் ராஜ், RK சுரேஷ் மற்றும் பலர்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு: S.K. செல்வகுமார்

எடிட்டிங்: வெங்கட் ராஜன்

தயாரிப்பு: 2D Entertainment

இயக்கம்: முத்தையா.

Viruman Movie Review and Rating
Viruman Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

தனது அம்மா இறப்பிற்கு காரணமே தன்னுடைய அப்பாதான் என நினைக்கும் ஹீரோ கார்த்தி, அப்பா மற்றும் தன்னுடைய 3 அண்ணன்களை விட்டு பிரிந்து தனது மாமாவுடன் வாழ்ந்து வருகிறார். அப்பா பிரகாஷை கண்டாலே காண்டாகும் கார்த்தி, இடையில் வரும் நாயகி, வில்லன். இறுதியாக அப்பா – மகன் ஒன்றினைந்தார்களா என்பதே கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் வெளியாகியுள்ள விருமன் படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை ஹீரோ கார்த்தி சொல்லவா வேண்டும் பருத்திவீரன், கொம்பன் படங்களில் முரட்டுத்தனமான கிராமத்து இளைங்கனாக படமுழுக்க அசத்தியுள்ளார். ஹீரோயின் அதிதி ஷங்கருக்கு நல்லதொரு அறிமுகம், குறியில்லாமல் தான் நடித்திருக்கிறார் ஆனால் பெரிதாக ஸ்கோப் இல்லை. இவர்களை தவிர வரும் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், RK சுரேஷ் உள்ளிட்ட முக்கிய பாத்திரங்கள் கொடுத்த பாத்திரங்களை ரொம்ப நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

டெக்கினிக்கல் டீமை பொறுத்தவரை கமர்ஷியல் தேவையான கலர்ஃபுல் ஒளிப்பதிவு பலம். யுவனின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும், பின்னணி இசை இன்னும் வலுசேர்த்திருக்கலாம். அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள், அதற்கு வலுசேர்த்த வெங்கட் ராஜனின் எடிட்டிங் பெரிய பலம். இதற்குமுன் முத்தையா இயக்கிய படங்களை பார்த்தவர்களுக்கு இப்படத்தின் கதையோட்டம் என்ன என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்துவிடும், அந்தளவிற்கு அதே டெம்ப்ளேட்டுகளை அடுக்கி வைத்துள்ளார். இதைவிட சரத்குமார் நடிப்பில் வெளியான கட்டபொம்மன் என்கிற படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியை அப்படியே வைத்துள்ளனர்.

கதை புதிதாக இல்லை என்றாலும், திரைக்கதையிலும் பெரிதாக சுவாரஸ்யம் இல்லை. வில்லன் கதாப்பாத்திரம் அழுத்தமாக இல்லை என்பதால் கிளைமாக்ஸ் முழு திருப்தியை கொடுக்கவில்லை. ஏகப்பட்ட துணை கதாப்பாத்திரங்கள் ஆனால் எதுவுமே பெரிதாக பயன்பட வில்லை, என்னமோ கூட்டம் கூட்டமாக வந்து போறாங்கங்கிற மாதிரி தான் இருக்கு. ஹீரோ கல்யாண, சாவு வீடுகளில் பந்தல் போடும் நபராக வருகிறார், ஆனால் 8 லட்சம் வேண்டுமா உடனே இந்தா என எடுத்து கொடுக்கிறார், ஏலத்திற்கு சென்று 12 லட்சம் வரை ஏலத்தை கேட்கிறார் எப்படி? எங்கருந்து இவ்வளவு காசு வருது? ஒன்னும் புரியலப்பா! இறுதியாக படம் எப்படி என்றால்? ரொம்பவே ஆவ்ரேஜ் படம்தாங்க இந்த விருமன்.

Viruman Movie Film Crazy Media Rating: 2 /5

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE