‘விலங்கு’ வெப் சீரிஸ் விமர்சனம் | Vilangu Web Series Review

0
Vilangu Web Series Review and Rating
Vilangu Web Series Review and Rating

‘விலங்கு’ வெப் சீரிஸ் விமர்சனம் – Vilangu Web Series Review

படக்குழு:

நடிகர்கள்: விமல், இனியா, பாலசரவணன், முனிஸ்காந்த், RNR மனோகர் மற்றும் பலர்.

இசை: அஜீஸ்

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்

எடிட்டிங்: கணேஷ் சிவா

தயாரிப்பு: S. மதன்

இயக்கம்: பிரசாந்த் பாண்டிராஜ்

OTT: Zee5.

Vilangu Web Series Review and Rating
Vilangu Web Series Review and Rating

கதைச்சுருக்கம்:

காட்டில் கிடக்கும் மர்ம சடலம், இந்த தகவல் போலீஸான நாயகனுக்கு வருகிறது. உடனே தனது டீமுடன் சென்று யார் சடலம்? எப்படி
இங்கு வந்தது? என விசாரிக்க, மேல் அதிகாரி இந்த கேஸை நீதான் முடிக்க வேண்டும் என விமலிடம் கூற துவங்குகிறது கதை. இதில்
பிரச்சனை என்னவென்றால் அந்த சடலத்திற்கு தலை இல்லை, வெறும் முண்டம் மட்டுமே கிடக்க, நாயகன் விசாரணையை துவங்குகிறார்.
இறுதியாக எடுத்த இந்த மர்ம கேஸை எப்படி கையாண்டார்? வெற்றிகரமாக முடித்தாரா? என்கிற விறுவிறுப்பு கலந்த சுவாரஸ்யமே மீதிக் கதை.

Vilangu Web Series Review and Rating
Vilangu Web Series Review and Rating

FC விமர்சனம்:

தமிழ் சினிமாவில் வெற்றியுடன் தனது பயணத்தை துவங்கிய விமல், ஒருக்கட்டத்தில் காணாமலே போனார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது வெப் சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். எப்படி இருக்கிறது இந்த வெப் சீரிஸ்? வாருங்கள் பார்ப்போம். கதாப்பாத்திரங்களை பொறுத்தவரை எல்லாருமே தங்களது சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். விமல் துவக்கம் மூன்று எபிசொட்கள் பெரிதாக இல்லை என்றாலும், கடைசி இரண்டு, மூன்று எபிசோட்கள் மிரட்டியுள்ளார். அதேபோல், இனியா, பால சரவணன், RNR மனோகர் என முக்கிய பாத்திரங்கள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். பாலசரவணன் சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

Vilangu Web Series Review and Rating
Vilangu Web Series Review and Rating

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை திரில்லர் கதைக்கு ஏற்ற தரமான ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், கலை என அனைத்துமே சிறப்பாகவே அமைந்துள்ளது. படத்தின் குறையாக தெரிவது கடைசி மூன்று எபிசோட்களில் இருக்கும் சுவார்ஸ்யமும், வேகமும் துவக்க எபிசோட்களில் சற்று குறைவு. தான் எடுத்துக்கொண்ட கதையை கொஞ்சம் இழுத்து சொல்லியிருந்தாலும் தனது பெயர் சொல்லுபடி கொடுத்துள்ளார் இயக்குனர்(). பாராட்டுக்கள். இறுதியாக கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடிய வகையில் வெளியாகியுள்ள ஒரு நல்ல வெப் சீரிஸ் இந்த
விலங்கு. 

  Vilangu Web Series FC Rating – 3.5 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்