பிரபல மலையாள இயக்குனருடன் இணையும் விக்ரம்:
மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘2018’. டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் மலையாள சினிமா வசூலில் புதிய சாதனையை படைத்தது. விமர்சன ரீதியிலும் இப்படம் நல்ல வரவேற்பையே பெற்றது.


இப்படத்தை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருந்தார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். ஆனால் நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண