விக்ரம் – நிஜமாகவே திரையில் தீ பிடித்தது! மக்கள் பதற்றம்

0
Vikram - The screen really caught fire!
Vikram - The screen really caught fire!

விக்ரம் – நிஜமாகவே திரையில் தீ பிடித்தது! மக்கள் பதற்றம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் படங்களிலேயே மாபெரும் வசூல் சாதனையை படைத்து வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

புதுச்சேரி அருகே காலாப்பட்டு அருகே உள்ள ஜெயா திரையரங்கில் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டது. நேற்று செவ்வாய்கிழமை இரவு காட்சி வழக்கம்போல் திரையிடப்பட்டது. அப்போது, க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவின் எண்ட்ரீயின் போது திரையரங்கில் உள்ள திரை தீப்பிடிக்க ஆரம்பித்தது.

Vikram - The screen really caught fire!
Vikram – The screen really caught fire!

கொஞ்சம் கொஞ்சமாக தீ திரை முழுவதுமாக பரவ தொடங்கியது. இதனால், ரசிகர்கள் அலறி அடித்துக் கொண்டு திரையரங்கை விட்டு வெளியே ஓடினர். அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள், திரை முழுவதுமாய் தீக்கிரையானது. இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே திரையரங்கு தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE