தங்கலான் படப்பிடிப்பில் விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்து! விலா எலும்பு முறிவு: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தங்கலான்’. UV கிரியேஷன்ஸ் & ஸ்டுடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். KGF பின்னணியில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.


இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பின் ஒத்திகையின் போது விக்ரமிற்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயம் முழுமையாக சரியாகும் வரை சிறிது காலத்திற்கு தங்கலான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என விக்ரமின் மேலாளர் சூரிய நாராயணன் கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…