அப்பா விக்ரமுடன் நடிக்கும் துருவ்! லேட்டஸ்ட் தகவல்

0
Vikram 60 Movie Latest Update

‘சியான்’ விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

Vikram 60 Movie Latest Update
Vikram – Karthik Subbaraj

இப்படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க விக்ரம் நடிக்கவுள்ள 60 -வது படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வரத்துவங்கியுள்ளன. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்பராஜ் விக்ரம் 60 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்ற ஆண்டு வெளியான ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் துருவ் விக்ரம். ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததால் அப்செட்டான விக்ரம், தன் மகனின் சினிமா வாழ்கையை மனதில் கொண்டே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Vikram 60 Movie Latest Update
Vikram – Dhruv Vikram

பேட்ட படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இப்படம் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…