விக்ரம் திரைப்பட விமர்சனம் | Vikram 2022 Movie Review & Rating

0
Vikram 2022 Movie Review & Rating
Vikram 2022 Movie Review & Rating

விக்ரம் 2022 திரைப்பட விமர்சனம் | Vikram 2022 Movie Review & Rating

படக்குழு: 

நடிகர்கள்: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் & சூர்யா.

இசை: அனிருத் 

ஒளிப்பதிவு: கிரிஸ் கங்காதரன்

எடிட்டிங்: பிலோமின் ராஜ்

தயாரிப்பு: ராஜ் கமல் பிலிம்ஸ்

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்.

Vikram 2022 Movie Review & Rating
Vikram 2022 Movie Review & Rating

கதைச்சுருக்கம்: 

மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் ஒன்று காவல் துறையில் இருப்பவர்களை கொலை செய்ய துவங்குகிறது. இதில் நாயகனின் மகன் கொல்லப்படுகிறார். தன் மகனின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் நபர்களை பழிவாங்க துடிக்கும் தகப்பன்(நாயகன்), யார் அந்த நபர்கள்? எப்படி இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது? இறுதியாக எடுத்த சபதத்தை நாயகன் முடித்தாரா? என்பதே இப்படத்தின் சுவாரஸ்யமான முழுக்கதை.

Vikram 2022 Movie Review & Rating
Vikram 2022 Movie Review & Rating

FC விமர்சனம்: 

கமல்ஹாசன் நடிப்பில் நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் விக்ரம், கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பது இப்படத்தின் கூடுதல் எதிர்ப்பார்ப்பு. சரி படம் எப்படி என விமர்சனத்திற்கு சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை வயதானாலும் சிங்கம் சிங்கம்தான் என மிரட்டியுள்ளார் கமல்ஹாசன். விஜய் சேதுபதி, பகத் பாசில் என இரு கைத்தேர்ந்த நடிகர்கள் இருந்தாலும், “** சின்ன பசங்கடா யாருக்கிட்ட” என்ற வசனத்திற்கு ஏற்ப முன் நிற்கிறார் கமல். நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனை திரையில் பார்ப்பது கூடுதல் மகிழ்ச்சி.

அடுத்து நடிப்பு அரக்கர்கள் விஜய் சேதுபதி & பகத் பாசில் இருவருமே தங்களது சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். இவர்களை தவிர கௌரவ பாத்திரத்தில் வரும் சூர்யா உண்மையில் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் தான். டெக்னிக்கல் டீம் இப்படத்திற்கான முக்கிய பலம் என்று கூறலாம். கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு மெருகேற்றியுள்ளது. பெரும்பாலும் இரவு காட்சிகள் என்றாலும் அவை அனைத்தையும் அருமையாக கையாண்டுள்ளார் கிரிஸ். அனிருத் இசை சொல்லவா வேண்டும், பாடல்கள் ஏற்கனவே பட்டையை கிளப்ப, பின்னணி இசையிலும் மாஸ் காட்டியுள்ளார். அன்பறிவின் சண்டைக் காட்சிகள் உலகத்தரம். படத்தின் இரண்டாம் பாதியெல்லாம் வெறும் ஆக்ஷன் தான் ஆனால் சலிப்பு தட்டாமல் கொண்டு சென்றுள்ளனர்.

Vikram 2022 Movie Review & Rating
Vikram 2022 Movie Review & Rating

படத்தின் கூடுதல் சிறப்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் சில பாத்திரங்களை இக்கதையில் இணைத்து புது முயற்சி செய்துள்ளார். அது படம் பார்த்தல் தான் புரியும். படத்தில் இத்தனை பெரிய நடிகர்கள் இருந்தாலும், ஒவ்வொருவரின் கதாப்பாத்திரமும் நேர்த்தியாக எழுதப்பட்டு, அவர்களுக்கு சரியான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கே இயக்குனரை பாராட்ட வேண்டும். சும்மா மார்கெட்டிங்கிற்காக பெரிய நடிகர்களை சேர்க்காமல் அவர்களுக்கு ஏற்ற பாத்திரங்களை கொடுத்து நிறைவு செய்துள்ளார். சரி, எல்லாமே நிறைகளா என்றால்? பெரியளவிற்கு இல்லை வழக்கம்போல் சில லாஜிக் மிஸ்டேக்ஸ், VFX சில இடங்களில் பிசிரடிக்கத் தான் செய்கிறது, அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி, கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய இப்படம் பெரிதாக லேக் அடிக்காமல் விறுவிறுப்பாகவே கொண்டு செல்கிறது. இறுதியாக படம் எப்படி என்றால்? ஆக்ஷன் பிரியர்களுக்கு செம விருந்து! மற்றபடி டீசன்டான ஆக்ஷன் திரில்லர் தான் இந்த விக்ரம். 

Vikram Movie FC Rating – 4 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்