மாஸ் லுக்கில் விஜய்! வெளியான வாரிசு புதிய போஸ்டர்: நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தமன் இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகுமென ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால், பொங்கல் ரிலீஸ் என்பதால் அடுத்த மாதத்திலிருந்து இருந்துதான் அப்டேட்டுகள் வெளியாகுமென படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை குஷிப் படுத்தும் வகையில் தீபாவளி வாழ்த்துடன் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது வாரிசு படக்குழு. கருப்பு உடையில் மாஸ் லுக்கில் விஜய் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE