‘கைகோர்ப்போம்’ மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள்!

0
Vijay's Latest Request About Chennai Floods
Vijay's Latest Request About Chennai Floods

‘கைகோர்ப்போம்’ மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் வேண்டுகோள்:

‘மிக்ஜாம்’ புயலால் சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்து ஒட்டுமொத்த சென்னையுமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. தன்னார்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை களத்தில் இறங்கி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு இதுக்குறித்து வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” என கூறியுள்ளார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் விஜயின் இந்த வேண்டுகோள் மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay's Latest Request About Chennai Floods
Vijay’s Latest Request About Chennai Floods

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0