டாப்சி நடிக்கும் படத்தில் கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி!

0
Vijay Sethupathi Plays Guest role in Taapsee Film

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்சி, இப்படத்தைத் தொடர்ந்து காஞ்சனா-2, வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை & கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Taapsee

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் பாலிவுட்டிலும் குறிப்பிடப்படும் நடிகையாக தற்போது மாறியுள்ளார். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதை, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ள படத்தில் முதன்மை பாத்திரத்தில் டாப்சி ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார், செப்டம்பர் 1-ந் தேதி ஜெய்ப்பூரில் தொடங்கவுள்ள இப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. (இந்த இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன், நடிகர்/இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் என்பது கூடுதல் தகவல்). விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

‘Article 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி & அருண்ராஜா காமராஜ்

OTT-ல் வெளியாகும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...