கமல் படத்தில் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி! இயக்குனர் இவரா?: கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள 233வது படத்தை H.வினோத் இயக்கவுள்ளார். ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்தான் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி (2023) இப்படத்தின் பூஜை துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE