‘மாஸ்டர்’ படம் பார்த்த விஜய்! பாராட்டு மழையில் லோகேஷ் கனகராஜ்

0
Vijay praised Lokesh Kanagaraj

‘தளபதி’ விஜய் & ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். XB கிரியேட்டர்ஸ் & செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Vijay praised Lokesh Kanagaraj
Vijay praised Lokesh Kanagaraj

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த இப்படம் கொரோனாவால் தள்ளிப்போனது. தற்போது, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை பார்த்து முடித்த விஜய் மிகவும் திருப்திகரமாக இருந்ததால், இயக்குனர் லோகேஷ் கனகராஜை அழைத்து மனதார பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் இப்படத்தை பற்றி விஜய் சேதுபதி, “மாஸ்டர் படத்தில், தான் கொடுமையான வில்லனாக நடித்துள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதால் எகிறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுமையாக பூர்த்தியாகும் எனவும் கூறியுள்ளார். மாஸ்டர் ..மாஸ்டர்பீஸ் தான்” என பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதனால் இப்படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...