சினிமாவினால் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து வித்யா பிரதீப் உருக்கமான பதிவு!

0
Vidya Pradeep shares her life journey in cinema

‘அவள் பெயர் தமிழரசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பிரதீப், இதன்பின் சைவம், பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். எனினும் தனக்கான தடத்தை சினிமாவில் பதிக்க காத்துக் கொண்டிருந்தவருக்கு ‘தடம்’ படமே பாதையாக அமைந்தது.

Vidya Pradeep shares her life journey in cinema
Vidya Pradeep

இந்நிலையில் தனது தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம் பற்றி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” தடம் படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதன்பின் எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு தான் தடம், ஒருநாள் ஸ்ருதி எனக்கு நடு இரவில் கால் செய்து உனக்கு ஒரு ஆடிஷன் இருக்கிறது. நாளை சென்று இயக்குனரை சந்திக்குமாறு சொன்னார். அப்போது சினிமா குறித்த நம்பிக்கையோ, எதிர்ப்பார்போ இல்லாமல் இருந்தேன், எனினும் அலுவலகத்திற்கு சென்று அங்கு தான் மகிழ்திருமேனி சாரை சந்தித்தேன் அவர் என்னிடம் இந்த ஆடிஷன் கடந்த சில மாதமாக நடந்து வருகிறது என்றும் காரணம் இந்த நடந்து வரும் இந்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறியிருந்தார்.

Vidya Pradeep shares her life journey in cinema
Vidya Pradeep in Ponmagal Vandhal

மேலும் என்னுடைய கண்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்றும் சொன்னார் இருப்பினும் படக்குழு என்னை தேர்வு செய்யவில்லை. மகிழ்திருமேனி சாரிடம் என்னுடைய கதாபாத்திரம் குறித்து நீண்ட நேரம் பேசிய பின்னர் எனக்குள் ஒரு நம்பிக்கை வந்தது அதன் பின்னர்தான் டெஸ்ட் ஷூட் செய்து அந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது. தடம் திரைப்படம் எனது திரைப்பட வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. திறமையை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது இங்கே திறமையை என்ற பார்க்கும் நல்ல இயக்குனர்கள் இருக்கின்றார்கள்.ஆனால், என்னைப் போன்று தாமாக நடிகையாக இருக்கும் நடிகைகள் எந்த ஒரு சிபாரிசு அல்லது வாரிசு நடிகராக இல்லாமல் வந்தால் அவர்கள் நிச்சயம் கடினமான சவாலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஒரு சில உடன்படுக்கைகளுக்கு நீங்கள் சமபதிக்கவில்லை என்றால், நீங்கள் நிராகரிக்க படலாம் அல்லது உங்களை நடிகையாகவே ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் உங்களையும், உங்களது கடின உழைப்பையும் நம்பினால் நீங்கள் நிச்சயம் சாதிக்க முடியும்” என தனது திரைப் பயணத்தை உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

Insta Feed:

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

For description please read my two comments below due to space limit👇🙏

A post shared by Vidya Pradeep (@vidya.pradeep01) on

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 கருப்பு புடவையில் ரசிகர்களை கவர்ந்த அனசுயா பரத்வாஜ்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...