வேழம் திரைப்பட விமர்சனம் | Vezham Movie Review & Rating

0
Vezham Movie Review & Rating
Vezham Movie Review & Rating

வேழம் திரைப்பட விமர்சனம் | Vezham Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி மற்றும் பலர்.

இசை: ஜானு சந்தர்

ஒளிப்பதிவு: சக்தி அரவிந்த்

எடிட்டிங்:

தயாரிப்பு: K4 கிரியேஷன்ஸ்

இயக்கம்: சந்தீப் ஷ்யாம்.

Vezham Movie Review & Rating
Vezham Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

ஊட்டியில் அடுத்தடுத்து கொலைகள் செய்யும் சைக்கோ குறித்த செய்தி பரவி வருகிறது. அந்த நேரத்தில் கதாநாயகன் தனது காதலியை பைக்கில் கூட்டி செல்ல, எதிர்பாராத இரண்டு நபர்களிடம் சிக்கி காதலி கொள்ளப்பட, கதாநாயகனின் தலையில் பலமாக அடிப்பட்டு சுயநினைவு இழக்கிறார். மீண்டு வந்த கதாநாயகன் தனது காதலியை கொன்றவர்களை பழிவாங்க களமிறங்குகிறார். இதன்பிறகு கொலையாளி யார்? நாயகன் பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் தியேட்டர்களில் வெளியாகியுள்ள வேழம் படம் எப்படி இருக்கு? விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை முக்கிய பாத்திரங்களான அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா மேனன் மூவருமே கொடுத்த பாத்திரத்தை நீட்டாகவே திரையில் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனனை தவிர மற்ற கதாப்பாத்திரங்கள் வலுவாக இல்லாததால் ஏதோ வந்து செல்கிறார்கள், மனதில் நிற்கவில்லை.

இப்படத்தின் டிரைலர் பார்க்கும் போது நல்லதொரு கிரைம் திரில்லர் போல என ஆர்வத்துடன் சென்றால், முதல் பாதியில் 1௦ நிமிடத்திற்கு மட்டுமே சைக்கோ சம்பத்தப்பட்ட காட்சிகளை வைத்துவிட்டு முதல் பாதி முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாகவே செல்கிறது. இதுவே நமக்கு சலிப்பை உண்டாக்குகிறது, மேலும் சிறிது ஏமாற்றத்தையும் தருகிறது. முதல் பாதியில் இவர்கள் கொட்டிய காதல் ரசத்தால் இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்கவில்லை. அவர்கள் டுவிஸ்ட் அது இதுன்னு ஏதோ முயற்சி செய்திருக்கிறார்கள், ஆனால் நமக்கு அது ஒட்டவில்லை. முதல் பாதியிலேயே விறுவிறுப்பை கூட்டி நான் லீனியர் முறையில் காட்சிகளை அடுக்கியிருந்தால் பொருந்தியிருக்கும். இறுதியாக படம் எப்படி என்றால்? நல்ல களம்தான் ஆனால் இவர்கள் காட்சிப்படுத்திய விதத்தில் பெரிதாக கோட்டை விட்டுள்ளனர், ஓகே ரகம்தான்…

Vezham Movie Film Crazy Media Rating: 2.5 /5

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்