‘இது நான் எடுக்கவேண்டிய படம்’ வெற்றிமாறன் பேச்சு!

0
Vetrimaaran Speech about Iraivan Miga Periyavan
Vetrimaaran Speech about Iraivan Miga Periyavan

இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுத, இயக்குனர் அமீர் இயக்கவுள்ள திரைப்படம் ‘இறைவன் மிக பெரியவன்’. இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் இணைந்து கதை எழுதியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் வெற்றிமாறன் பேசியதாவது, ” ரொம்ப நாள் முன்னாடி தங்கம் இந்தகதையை சொன்னார். அதற்கப்புறம் ரெண்டு பேரும் வெவ்வேறு வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டோம். ஒரு சமயத்தில் இந்தக்கதை எடுக்கலாம் என தோன்றியது. வழக்கமாக நான் எழுதவே மாட்டேன் ஆனால் இந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன், ஆனால் அப்போது செய்ய முடியவில்லை.

Vetrimaaran Speech about Iraivan Miga Periyavan
Vetrimaaran Speech about Iraivan Miga Periyavan

கதை எழுதும்போதே அமீரிடம் விவாதிப்பேன். கதையில் நான் சில மாற்றங்களை இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றினேன். நான் இந்த கதையை எடுக்கவில்லை என்ற நிலை வந்தபோது அமீர் நான் எடுக்கவா என்றார். அவர் எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவர் திரைக்கதையில், சில மாற்றங்களை அவர் வாழ்வியலில் இருந்து எடுத்து வந்துள்ளார். இன்றைய காலகட்ட பிரச்சனையை சரியான விசயங்களை சொல்ல வேண்டும் என்பது தான் நாங்கள் இணைந்து வேலை செய்ய காரணம்” என கூறியுள்ளார்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்