பாலு மகேந்திரா அவர்களிடம் உதவியாளராக இருந்து, தனுஷ் நடிப்பில் ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வெற்றிமாறன்.


தான் இயக்கிய முதல் படமே பெரிய வெற்றி, எனவே அதே கூட்டணியுடன் மீண்டும் களமிறங்கினார் வெற்றிமாறன். தனுஷ் – டாப்சி நடிப்பில் ‘ஆடுகளம்’, இப்படம் வெறும் வெற்றி மட்டுமில்லாமல் தேசிய விருதையும் இவருக்கு பெற்றுத்தந்தது. தொடர்ந்து சற்று இடைவெளி, மீண்டும் விசாரணை என்கிற படத்தின் மூலம் மீண்டும் களம் கண்டார் வெற்றிமாறன். இதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் கூட்டணி, வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்த ப்ளாக்பஸ்டர்ஸ். சினிமா மீதான கண்ணோட்டம், தனக்கான ஒரு ஸ்டைல், படத்தை பொறுத்தளவில் எதிலும் சமரசம் இல்லாமல் சொல்ல வருவதை அழுத்தத்துடன் தடம் பதிப்பதால் தமிழ் சினிமாவில் குறிப்பிடும் சில இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.


தற்போது சூரி நடிப்பில் ஒரு படத்தையும், கலைப்புலி தாணு தயாரிக்க சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தையும் இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “முதலில் சூரி படத்தை முடித்துவிட்டு அதன்பின் சூர்யாவின் ’வாடிவாசல்’ படத்தின் பணியை தொடங்க போவதாகவும் அதற்கு அடுத்தபடியாக விஜய்க்காக கதையை தயார் செய்ய ஆரம்பித்து விட்டேன் என்றும் விஜய்யின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார். இந்த செய்தி விஜய் ரசிகர்களிடம் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இவ்வளவு வெற்றி, விருதுகள், பாராட்டுக்கள் என திரைத்துறையில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வெற்றிமாறன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”
கர்ப்பமாக இருக்கிறேனா? நடிகை சமந்தா நக்கல் பதில்
லாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்! புதுப்பட தகவல்
நடிகை ரைசா வில்சனின் ஓணம் சிறப்பு படங்கள்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...