‘வெண்ணிலவு சாரல்’ பாடல் வரிகள்| Vennilavu Saaral Song Lyrics in Tamil – Amaran

5
Vennilavu Saaral Song Lyrics in Tamil
Vennilavu Saaral Song Lyrics in Tamil

‘வெண்ணிலவு சாரல்’ பாடல் வரிகள்| Vennilavu Saaral Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ…
வீசும் குளிர் காதல் நீ…

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ…

பெண் : கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தோகையாகும் காலம் நீ…

ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்ஜமே ஏங்கும் தேடல் நீ…

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ…

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ…

ஆண் : பாதி நீயே என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே…

பெண் : ஆதி நீயே என் ஆயுள் நீயே
ஆணி வேரை நீங்காது மண்ணே…

ஆண் : எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே…

பெண் : கண்ணாய் எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே…

ஆண் : நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே…

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ…

பெண் : கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தோகையாகும் காலம் நீ…

ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே எங்கும் தேடல் நீ….

பாடல் விவரம்:

திரைப்படம்: அமரன்

இசை: G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: கபில் கபிலன் & ரக்ஷிதா சுரேஷ்

பாடலாசியர்: யுகபாரதி.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…