‘தளபதி 68’ அரசியல் படமா? வெங்கட் பிரபு கூறிய பதில்:
லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.


ப்ர- ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் துவங்கலாமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் கூறியதாவது, ” ‘தளபதி 68’ படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பிறகுதான் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும். இந்த படம் அரசியல் படமல்ல. மாறாக என்னுடைய வழக்கமான என்டர்டெயினர் படமாக இருக்கும். இந்த படத்தில் கமிட்டான பிறகு முதலில் அஜித் தான் வாழ்த்து தெரிவித்தார். உங்கள் பட டைட்டிலில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் என போடுவீர்களா? என்ற கேள்விக்கு, நான் தளபதி என்று தான் போடுவேன், அதுதான் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என கூறியுள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண