வெந்து தணிந்தது காடு திரைப்பட விமர்சனம் | Vendhu Thanindhathu Kaadu Movie Review

0
Vendhu Thanindhathu Kaadu Movie Review and Rating
Vendhu Thanindhathu Kaadu Movie Review and Rating

வெந்து தணிந்தது காடு திரைப்பட விமர்சனம் | Vendhu Thanindhathu Kaadu Movie Review

படக்குழு:

நடிகர்கள்: சிலம்பரசன், சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் மற்றும் பலர்.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி

எடிட்டிங்: ஆண்டனி

தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்

இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்.

Vendhu Thanindhathu Kaadu Movie Review and Rating
Vendhu Thanindhathu Kaadu Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

கிராமத்து இளைங்கனாக வரும் நாயகன் சிம்பு, தனது குடும்ப சூழ்நிலையால் மும்பையிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு செல்கிறார். அந்த ஹோட்டலிலேயே தங்கி வேலை செய்கிறார். எந்த வம்புதும்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தனது வேலை உண்டு என வாழ்ந்து வரும் நாயகனின் வாழ்க்கை, சில சம்பவங்களால் அவரே நினைக்காத வேறு பாதைக்கு செல்கிறது. இறுதியாக நாயகன் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.

Vendhu Thanindhathu Kaadu Movie Review and Rating
Vendhu Thanindhathu Kaadu Movie Review and Rating

FC விமர்சனம்:

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்களை தொடர்ந்து சிலம்பரசன் – கௌதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை சிலம்பரசன் திரைவாழ்க்கையில் முக்கியமான படம் என்றே சொல்லலாம், காரணம் அவ்வளவு நேர்த்தியாக நடித்துள்ளார். படத்தின் துவக்கத்தில் கிராமத்து இளைங்கனாக உடல் இளைத்து நடித்ததாக இருக்கட்டும், பிறகு மும்பைக்கு சென்று அங்கு சந்திக்கும் பிரச்சனைகளை தனது யதார்த்த நடிப்பால் கையாண்ட விதமாகட்டும் பிச்சு உதறியுள்ளார் சிம்பு. இவரை தவிர நாயகி சித்தி இத்னானி அழகில் கவர்கிறார், நடிப்பிலும் எந்தவொரு குறையில்லாமால் கடந்து செல்கிறார். இவர்களை தவிர வரும் மற்ற கதாப்பாத்திரங்களுமே கொடுத்த வேலையை நேர்த்தியாகவே செய்துள்ளனர்.

Vendhu Thanindhathu Kaadu Movie Review and Rating
Vendhu Thanindhathu Kaadu Movie Review and Rating

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை இப்படத்திற்கு தூணாக இருந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் அனைத்தும் வேற லெவல், அதிலும் மறக்குமா நெஞ்சம் பாடல் வரும் இடங்கள் அனைத்துமே புல்லரித்து தான் போகிறது. சித்தார்த்தா நுனிவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம், நிறைய சிங்கிள் டேக் காட்சிகள் முயற்சி செய்துள்ளனர் அது நிறைவாகவும் வந்துள்ளது கூடுதல் சிறப்பு. சண்டைக் காட்சிகள் ஓவர் பில்டப் இல்லாமல், யதார்த்தத்தை தொட்டே இருப்பதால் ரசிக்குபடியாக அமைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் ஒன்றும் புதிதானது இல்லை, நாம் பார்த்து சலித்த கேங்க்ஸ்டர் கதைதான், திரைக்கதையில் சுவாரஸ்யம் உள்ளதா என்றால் முழுமையாக இல்லை. படம் மெதுவாகத்தான் நகர்கிறது, ஆங்காங்கே லேகிங் அடிக்கத்தான் செய்கிறது. பொதுவாக கௌதம் மேனன் படங்களில் வரும் காதல் காட்சிகள் போல் இல்லாமல், இது செயற்கையாகவும், படத்தோடு ஒட்டாமலும் திணிக்கப்பட்டுள்ளது பெரிய குறை. இறுதியாக படம் எப்படி? என்றால் சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தும், ஈர்க்கும் படமாக கண்டிப்பாக இருக்கும். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு இது (பொறுமையா) ஒருமுறை பார்க்கலாம் ரகம்தான்…

Vendhu Thanindhathu Kaadu Movie Film Crazy Media Rating: 3 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE