‘விலகாத’ பாடல் வரிகள்| Velagaadha Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: விலகாத என்ன விட்டு விலகாத
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத…
ஆண்: நீயும் இங்க நானும் இங்க
சேரும் வழி எங்க
பாத இங்க தூரம் இங்க
போகும் திச எங்க…
ஆண்: விலகாத என்ன விட்டு விலகாத
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத
விலகாத என்ன விட்டு விலகாத
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத…
ஆண்: ஒத்த துளி வீழ்ந்தா கூட சுட்ட மணல் ஒன்னா சேரும்
நெஞ்ச தொட கண்ணீர் துளி இன்னும் வேணுமா…
ஆண்: உள்ளுக்குள்ள காதல் ஊற
மெல்ல மெல்ல எல்லாம் மாற
நீளும் அந்த வானம் வர பேசிப் போவோமா…
ஆண்: எத தேடி அலஞ்சேனோ அடி உன்னயும் தொலச்சிட்டேன்
உனக்காகவே புதுசாவேன் உயிரே ஏத்துக்க…
ஆண்: விலகாத என்ன விட்டு விலகாத
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத…
ஆண்: வழி சேர முடியாதா
விலகாத விலகாத
வலியெல்லாம் குறையாதா
ஒதுங்காத ஒதுங்காத…
ஆண்: விலகாத.. விலகாத…
பாடல் விவரம்:
திரைப்படம்: லவ்வர்
இசை: ஷான் ரோல்டன்
பாடியவர்கள்: கபில் கபிலன்
பாடலாசியர்: மோகன் ராஜன்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…